Mars Transit In Taurus On 21 June 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. மேலும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜூன் 21 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனின் ராசிக்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் 5 ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல உயர்வை, நல்ல நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்களும், முன்னேற்றத்தையும் காணக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது ஒரு திருப்புமுனையாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதன் மூலம் வங்கியில் இருப்பு அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலை உயரும். இருப்பினும் செலவைக் கட்டுப்படுத்த பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மேலும் சிக்கியிருந்த பணம் திடீரென்று கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம். அதோடு, சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆற்றல் அதிகரிக்கும். பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். ஆனால் இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமையை கையாண்டால், சூழ்நிலைகள் சாதகமாக மாறும். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.