← முகப்பு இன்றைய ராசிபலன்

Rahu Transit In Avittam Nakshatra On 30 June 2026: ராகு ஜூன் 30

🕐 18 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 4 பார்வைகள்
Rahu Transit In Avittam Nakshatra On 30 June 2026: ராகு ஜூன் 30

Rahu Transit In Avittam Nakshatra On 30 June 2026: ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறார். இந்த ராகு மற்ற கிரகங்களை போல் நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ரகதியில் பயணிப்பார். மேலும் இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி ராகுவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த ராகு ஜூன் 30 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் ராகு 2027 ஏப்ரல் மாதம் வரை இருப்பார். அதன் பின் திருவோணம் நட்சத்திரத்திற்குள் நுழைவார்.

ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நிதி விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Rahu Transit In Avittam Nakshatra On 30 June 2026 These Zodiac Signs Should Be Careful

ரிஷபம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல சிரமங்களை சந்திப்பார்கள். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். சிலருக்கு பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பள்ளது. வேலை மற்றும் தொழிலில் பல தடைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக மன அமைதி பாழாகும். மனம் ஒருவித குழப்பத்துடனேயே இருக்கும். எந்த ஒரு செயலை செய்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Rahu Transit In Avittam Nakshatra On 30 June 2026 These Zodiac Signs Should Be Careful

மிதுனம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் பலவிதமான சவால்களை சந்திப்பார்கள். பெற்றோருடனான உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடை ஏற்படலாம். பணத்தை சேமிக்க வைக்க முடியாமல் போகும். வாழ்வில் சிரமங்கள் அதிகரிக்கும். மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால், மோசமான விளைவுகளை தவிர்க்கலாம்.

Rahu Transit In Avittam Nakshatra On 30 June 2026 These Zodiac Signs Should Be Careful

சிம்மம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் பேச்சிலும், நடத்தையிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிதாக தொடங்கிய வேலையில் தாமதம் ஏற்படலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான நிதி முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

Rahu Transit In Avittam Nakshatra On 30 June 2026 These Zodiac Signs Should Be Careful

விருச்சிகம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் மிகுந்த மன குழப்பத்திற்கு ஆளாகக்கூடும். அதிகரித்த மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக தினசரி செயல்பாடுகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படலாம். சிலருக்கு நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை குறைவாக பேசுவதோடு, அமைதியாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net