← முகப்பு இன்றைய ராசிபலன்

Mars transit in Taurus bring financial gains to these 4 zodiac signs:

🕐 17 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 2 பார்வைகள்
Mars transit in Taurus bring financial gains to these 4 zodiac signs:

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் தங்களின் ராசிகளை மாற்றுகின்றன. தற்போது ஜூன் 21 அன்று செவ்வாய் கிரகம் மேஷ ராசியிலிருந்து விலகி சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்குள் நுழையப்போகிறது. இந்த கிரக மாற்றம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ‘தளபதி’ என்று அழைக்கப்படும் செவ்வாய், ஆற்றல், செயல்பாடு, லட்சியம் மற்றும் மன உறுதி ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறது.

செவ்வாய் ராசி மாறும்போது, ​​சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி சார்ந்த வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் ஏற்படக்கூடும். செவ்வாயின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு,அவர்களின் ராசி அதிபதியான செவ்வாய் கிரகம், செல்வம் மற்றும் நிதி விவகாரங்களைக் குறிக்கும் இரண்டாம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். மேலும், வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகளை உருவாகலாம். சிலர் புதிய வியாபாரங்களைத் தொடங்கலாம், அது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கலாம்.

திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, தொழில், சாதனைகள் மற்றும் பணி வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்தாம் வீட்டில் செவ்வாய் கிரகம் சஞ்சரிக்கவுள்ளது. இந்த ராசி மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைத் தருகிறது. சிம்ம ராசி வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் நன்மைகளைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் அவர்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.

மாணவர்களுக்கு, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு இது சிறந்த காலகட்டமாகும், மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். இந்த செவ்வாய் பெயர்ச்சி தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியை உறுதி செய்யும்.

Mars Transit in Taurus Bring Financial Benefits To These 4 Zodiac Signs

மகரம்

செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றுவது, ​​மகர ராசிக்காரர்கள் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களை அனுபவிக்கக்கூடும். இந்த ராசி மாற்றத்தால் உங்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வாழ்வின் பல விஷயங்களில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் திறமைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக இப்போது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மேலும் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்குச் செவ்வாய் கிரகம் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளது. இந்த இடம் பொதுவாகத் துணிச்சல், தகவல் தொடர்பு மற்றும் வணிகத்துடன் தொடர்புடையது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் பொருளாதார நிலை வெகுவாக மேம்படும், வியாபாரிகள் பெரிய வெற்றியை அடைவார்கள். அவர்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடலாம், மேலும் பிடித்த இடத்திற்கு துணையுடன் செல்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

உங்கள் குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் சிக்கித் தவிக்கும் பணத்தை மீட்டெடுக்க முடியும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்குவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net