← முகப்பு இன்றைய ராசிபலன்

Mercury Venus Forms Lakshmi Narayana Rajyoga On 22 June 2026: புதன் ஜூன்

🕐 18 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 4 பார்வைகள்
Mercury Venus Forms Lakshmi Narayana Rajyoga On 22 June 2026: புதன் ஜூன்

Mercury Venus Forms Lakshmi Narayana Rajyoga On 22 June 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் தற்போது தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் ஜூன் 22 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

அதே வேளையில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஏற்கனவே கடக ராசியில் பயணித்து வருகிறார். இதனால் இந்த புதன் பெயர்ச்சியால் கடக ராசியில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் விளைவாக இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகம் மிகவும் மங்களகரமானது. மேலும் இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதுவும் தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது புதன் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Mercury Venus Forms Lakshmi Narayana Rajyoga On 22 June 2026 List Of Lucky Zodiac Signs

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இதன் விளைவாக சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

Mercury Venus Forms Lakshmi Narayana Rajyoga On 22 June 2026 List Of Lucky Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

Mercury Venus Forms Lakshmi Narayana Rajyoga On 22 June 2026 List Of Lucky Zodiac Signs

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். அதோடு நல்ல லாபத்தையும் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

Mercury Venus Forms Lakshmi Narayana Rajyoga On 22 June 2026 List Of Lucky Zodiac Signs

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்பு இக்காலத்தில் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலைமை வலுவடையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net