Jupiter Nakshatra Transit On 18 June 2026: ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தேவர்களின் குருவாக கருதப்படுகிறார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி குருவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 18 ஆம் தேதி, அதாவது இன்று குரு பகவான் பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். ஆனால், இந்த நட்சத்திரத்தில் குரு உச்சம் பெற்று, சிறப்பான பலன்களைத் தருவார்.
இருப்பினும் அனைவருக்கும் இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைத்துவிடாது. சில ராசிக்காரர்கள் இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியால் நிதி, மனநிலை அல்லது ஆரோக்கியம் குறித்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சில ராசிக்காரர்களுக்கு வழக்கத்தை விட சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது குரு நட்சத்திர பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது கலவையான பலன்களைத் தரும். அதாவது, சில நல்ல பலன்களைப் பெற்றாலும், சில சமயங்களில் மோசமான பலன்களைத் தரலாம். முக்கியமாக செலவுகள் கையை மீறி செல்லும். இதன் விளைவாக பண பிரச்சனையை எதிர்கொள்ளக்கூடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அந்த பணத்தை திரும்ப பெற நிறைய அலைய வேண்டியிருக்கும்.

மிதுனம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களின் பேச்சு பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். முக்கியமாக பணியிடத்தில் மற்றும் வீட்டில் வாயை கட்டுப்படுத்தாவிட்டால், உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.

சிம்மம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு சற்று குறைவாக இருக்கும். இதனால் உங்களின் வேலைகளில் தடையை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அதிக அழுத்தத்தை உணரக்கூடும். இதன் மூலம் மனச்சோர்வுக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு பெரிய பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்சை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் நடக்கும் அரசியலில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் எவ்வித வதந்திகளையும் நம்பி எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சி சற்று சவாலானதாக இருக்கும். மறைமுக எதிரிகள் தொழிலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். நிதி இழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே பண விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பயணங்களை மேற்கொள்ளும் போது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.