← முகப்பு செய்திகள்

Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to stop comparing 15-year-old

🕐 18 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to stop comparing 15-year-old

சென்னை: இந்திய அணியில் அறிமுகமாகவுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சச்சின் ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்றால் வைபவ் ‘கடவுளின் பிள்ளை’ என்றும் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்து மிகக் குறைந்த வயதில் இந்திய சீனியர் அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். இதனால் இவரைப் பலரும் சச்சினுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "சச்சினையும் வைபவ்வையும் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள். சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். வைபவ் சூர்யவன்ஷி கடவுளின் பிள்ளை என்று நான் நம்புகிறேன். சச்சினுக்கு நிகராக யாரும் வர முடியாது. அதனால் இந்த வெற்று ஒப்பீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

Former Captain Krishnamachari Srikkanth Hails Young Sensation Vaibhav Suryavanshi as Child of God

வைபவ்வின் திறமைகளைப் பாராட்டிய ஸ்ரீகாந்த், "ஐபிஎல் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் வைபவ் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேட் ஸ்விங், மணிக்கட்டின் வேகம் மற்றும் பேட்டிங் உத்திகள் பிரமிக்க வைக்கின்றன. எல்லாவற்றையும் விட அவர் மிகவும் முதிர்ச்சியான மனநிலையைக் கொண்டுள்ளார்.

ஐபிஎல் 2026 குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடிய 96 ரன்கள் இன்னிங்ஸ் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். அணி கடுமையான அழுத்தத்தில் இருந்த போது, விக்கெட்டை வீணாக்காமல் பொறுமையுடன் விளையாடி ஆட்டத்தை நகர்த்தினார். அவரிடம் ரன் குவிக்க வேண்டும், ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற பசி எப்போதும் உள்ளது" என்று கூறினார்.

வைபவ் சூர்யவன்ஷியை தோல்விக்கு தயார் செய்யுங்கள்.. பிசிசிஐ-க்கு பேடி அப்டன் முக்கிய அட்வைஸ்!

மேலும், ஸ்ரீகாந்த் கூறுகையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு கிரிக்கெட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் காத்துள்ளது என்றும், அவரை அவரது இயல்பான பாணியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும், யாருடனும் ஒப்பிடாமல் அவரை நாம் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“எல்லை மீறிப் போய்விட்டீர்கள்”.. வைபவ் சூர்யவன்ஷி, திலக் வர்மாவுக்கு தண்டனை கொடுத்த பிசிசிஐ

என்னதான் ஸ்ரீகாந்த் வைபவ் சூர்யவன்ஷி முதிர்ச்சியுடன் ஆடுவதாகக் கூறினாலும், இலங்கை ஏ அணி வீரரை அவர் தள்ளி விட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ் நீரிணை நாளை முழுவதுமாக திறக்கப்பட உள்ளது. மே
18 Jun 2026
செய்திகள்
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக,டில்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு திடுக்
18 Jun 2026
செய்திகள்
அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.எடப்பாடி பழனிசாமி தன் மகனான மிதுனை அரசியல்
18 Jun 2026
செய்திகள்
காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.880 வரை குறைந்திருப்பது மகளிருக்கு மகிழ்
18 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Jun 2026
செய்திகள்
Prepare Vaibhav Suryavanshi for failures; Paddy Upton Advises BCCI to Prepare him
18 Jun 2026
முக்கிய செய்திகள்
1
(செ.கவிஷனா)இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை
தமிழ் · 18 Jun 2026
2
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ்
3
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படு
4
Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to s
5
அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.எட
6
காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்க
7
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net