← முகப்பு இன்றைய ராசிபலன்

Mars Mercury Make Dhan Yog 2026: செவ்வாய் இன்று தனது சொந்த ராசியான மேஷ

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 34 பார்வைகள்
Mars Mercury Make Dhan Yog 2026: செவ்வாய் இன்று தனது சொந்த ராசியான மேஷ

Mars Mercury Make Dhan Yog 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இதுவரை செவ்வாய் மீன ராசியில் இருந்தார். இந்நிலையில் செவ்வாய் இன்று தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பயணித்து வருகிறார்.

இதனால் மேஷ ராசியில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த தன யோகம் உருவாகியுள்ளது. இந்த தன் யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த தன யோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது செவ்வாய் புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Mars Mercury Make Dhan Yog 2026 List Of Lucky Zodiac Signs

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் தன யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணியிடத்தில் உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள்.

Mars Mercury Make Dhan Yog 2026 List Of Lucky Zodiac Signs

துலாம்

துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் தன யோகம் உருவாகியுள்ளது. இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான வழிகள் உருவாகும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை எடுக்கும் உங்கள் திறன் அதிகரிக்கும். பிரச்சனைகளை எளிதில் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Mars Mercury Make Dhan Yog 2026 List Of Lucky Zodiac Signs

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் தன யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் மேம்படும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

Mars Mercury Make Dhan Yog 2026 List Of Lucky Zodiac Signs

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கையால் தன யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட கால பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலை உயரும். மேலும் இக்காலத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இது வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும
2
R. Praggnanandhaa created history by becoming the first Indian ch
3
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 06 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
4
நார்வே செஸ்: கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் –
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
5
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இ
பதிவு · 1 மணி நேரம் முன்னர்
6
கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்ற
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலை
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net