← முகப்பு செய்திகள்

R. Praggnanandhaa created history by becoming the first Indian champion to win

🕐 06 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
R. Praggnanandhaa created history by becoming the first Indian champion to win

ஓஸ்லோ: நார்வே செஸ் 2026 தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற இந்த உயர்தர செஸ் தொடரின் இறுதிச் சுற்றில், 20 வயது பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Praggnanandhaa Storms to Historic Norway Chess 2026 Title with 4-Game Winning Streak

இறுதிச் சுற்றுக்கு முன்னதாக பிரக்ஞானந்தா, வெஸ்லி சோ மற்றும் அலிரேசா ஃபிரோஸ்ஜா ஆகிய மூவருக்கு இடையே சாம்பியன் பட்டத்திற்கான கடும் போட்டி நிலவியது. மற்றொரு போட்டியில் வெஸ்லி சோ, ஃபிரோஸ்ஜாவை அர்மகெடான் முறையில் வீழ்த்தினார். ஆனால், பிரக்ஞானந்தா கிளாசிகல் முறையில் முழுப் புள்ளிகளைப் பெற்றதால் வெஸ்லி சோவால் அவரை முந்த முடியவில்லை. மற்றொரு போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியன் டி.குகேஷை வீழ்த்தி 4-வது இடத்தைப் பிடித்தார்.

இத்தொடரின் நடுப்பகுதியில் சில தோல்விகளால் பிரக்ஞானந்தா பின் தங்கியிருந்தார். ஆனால், அதன் பிறகு அசத்தலாக மீண்டெழுந்த அவர், அலிரேசா ஃபிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன் மற்றும் குகேஷ் என உலகின் முன்னணி வீரர்களுக்கு எதிராக தொடர்ச்சியாகக் கிளாசிகல் போட்டிகளில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். குறிப்பாக, 9-வது சுற்றில் குகேஷுக்கு எதிராகப் பெற்ற வெற்றி அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இத்தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை கிளாசிகல் போட்டிகளில் பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஒரே தொடரில் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், 2026 ஆம் ஆண்டில் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய முதல் வீரரும் இவரே ஆவார்.

முதலில் கார்ல்சன்.. இப்போது குகேஷ்.. பிரக்ஞானந்தா உச்சகட்ட ஃபார்ம்.. நார்வே செஸ்ஸில் அதிரடி

சென்னையைச் சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தா, ஏற்கனவே கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்று உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். தற்போது நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தையும் தனது கணக்கில் சேர்த்து இந்திய செஸ் விளையாட்டின் புதிய பொற்காலத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
IND vs AFG Test Toss, Playing XI: Left-Arm Spinner Manav Suthar Makes
06 Jun 2026
செய்திகள்
2026 ஜூன் 03 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட
16 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் பொத்துவில் ப
18 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதாகி நின்றதால் குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் பலி
29 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
நார்வே செஸ்: கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் – பிரக்ஞானந்தாவுக்கு அம்மா சொன்ன ‘மந்திரம்’
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்றார்கள்?
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net