Numerology: எண்களை அடிப்படையாக கொண்டு கணித்து கூறப்படும் ஒரு ஜோதிட முறை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்றவை கணித்து கூறப்படுகின்றன. அதுவும் குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் தொழில் ரீதியாகவும் சரி, பண ரீதியாகவும் சரி நல்ல அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
ஆனால் சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறு வெற்றியைக் காணவும், பணத்தை சம்பாதிக்கவும் அதிகமாக போராட வேண்டியிருக்கும். இத்தகையவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவாகவே இருக்கும். சொல்லப்போனால் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கான பலன் கிடைக்காது. அப்படி நியூமராலஜி படி, எந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்கவும், வெற்றி பெறவும் கஷ்டப்படுவார்கள் என்பதைக் காண்போம்.
எண் 4
ஒரு மாதத்தின் 4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணின் அதிபதி ராகு. இந்த எண்ணிற்கு உரியவர்கள், அதாவது இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான போராட்டங்களை சந்திப்பார்கள். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், பலன் கிடைக்காமல் சிரமப்படுவார்கள். வாழ்க்கையில் பண பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கும். பணம் சம்பாதிக்க அதிகமாக போராட வேண்டியிருக்கும். முக்கியமாக இவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

எண் 7
ஒரு மாதத்தின் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த எண்ணின் அதிபதி கேது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதிர்ஷ்டம் குறைவாக இருப்பதால், முன்னேற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கும். சொத்து பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் கையில் பணம் நிலைத்திருக்காது. கடன் தொல்லை அதிகமாக இருக்கும். இதனால் இவர்கள் மட்டுமின்றி, இவர்கள் குடும்பத்தினரும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எண் 8
ஒரு மாதத்தின் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணின் அதிபதி சனி. இந்த தேதிகளில் பிறந்தவர்களை சனி பகவான் கடினமாக உழைக்க வைப்பார். மேலும் அடிக்கடி இவர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் இருந்தவாறு இருக்கும். அதுமட்டுமின்றி அடிக்கடி விபத்துக்களை சந்திக்க நேரிடும். இந்த தேதிகளில் பிறந்தவர்களால் நிலையான வாழ்க்கையை வாழவே முடியாது. பணம் கைக்கு வந்த வேகத்தில் செலவாகிவிடும். சட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். முக்கியமாக பரம்பரை சொத்துக்கள் கூட கைக்கு கிடைக்காமல் சிரமப்படுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.