← முகப்பு இன்றைய ராசிபலன்

Jupiter Venus Make Gajlakshmi Rajyog On June 2026: கடக ராசிக்கு அசுரர்களின் குருவாக

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 32 பார்வைகள்
Jupiter Venus Make Gajlakshmi Rajyog On June 2026: கடக ராசிக்கு அசுரர்களின் குருவாக

Jupiter Venus Make Gajlakshmi Rajyog On June 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான்.

இந்த குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இந்த ராசிக்குள் குரு பகவான் நுழையவிருக்கிறார். இந்த கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசிக்கு அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ஜூன் 08 ஆம் தேதி நுழையவுள்ளார்.

இதனால் கடக ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த மற்றும் மங்களகரமான கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் செல்வம், செழிப்பு, சுகம், தொழில் முன்னேற்றம், சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் குறிக்கிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சாதகமான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது 12 ஆண்டுகள் கழித்து கடக ராசியில் குரு-சுக்கிரனால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Jupiter Venus Make Gajlakshmi Rajyog On June 2026 List Of Lucky Zodiac Signs

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் குரு-சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

நிதி நிலைமை வழக்கத்தை விட வலிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். சுக்கிரனின் அருளுல் பொருள் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

Jupiter Venus Make Gajlakshmi Rajyog On June 2026 List Of Lucky Zodiac Signs

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு-சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாக வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாயங்கள் அல்லது ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் குறையும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். புதுமண தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

Jupiter Venus Make Gajlakshmi Rajyog On June 2026 List Of Lucky Zodiac Signs

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு-சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாய்ப்புக்கள் கிடைக்கும்.

வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net