← முகப்பு செய்திகள்

IND vs AFG Test: Afghanistan head coach Richard Pybus admits that communication

🕐 08 Jun 2026 📂 செய்திகள் 10 பார்வைகள்
IND vs AFG Test: Afghanistan head coach Richard Pybus admits that communication

சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் (டிசிஷன் ரிவியூ சிஸ்டம்) முறையைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியது தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிச்சர்ட் பைபஸ் புலம்பி இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் தடுமாற்றம் காரணமாக, இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாவதில் இருந்து தப்பினர். முதல் நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் அவுட்டாகியிருந்தும் ஆப்கானிஸ்தான் ரிவியூ எடுக்கவில்லை. அதேபோல், இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரும் அவுட்டாவதிலிருந்து தப்பினர்.

IND vs AFG Test Afghanistan Coach Richard Pybus says Lack of DRS Precision Proved Costly

குறிப்பாக, அஸ்மத்துல்லா உமர்சாய் வீசிய பந்தில் கில் விக்கெட்டை இழந்திருக்க வேண்டிய தருணத்தில் ஆப்கானிஸ்தான் ரிவியூ எடுக்கத் தவறியது அவர்களுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிச்சர்ட் பைபஸ் கூறுகையில் –

"நாங்கள் மிகவும் மந்தமாகச் செயல்பட்டோம். முக்கியத் தருணங்களில் ரிவியூ எடுப்பதில் வீரர்களிடையே தெளிவான முடிவு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லை. கேப்டன் முடிவெடுக்க மிகக் குறுகிய காலமே உள்ளது. அவர் மற்ற வீரர்களின் கருத்துக்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த சொதப்பல் எங்களுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.

கேப்டனின் இக்கட்டான சூழ்நிலை குறித்து அவர் விளக்குகையில், "கேப்டன் முழுமையாக விக்கெட் கீப்பர் மற்றும் பந்துவீச்சாளரின் ஆலோசனைகளை நம்பியே இருக்கிறார். விக்கெட் கீப்பர் பந்தின் திசையையும், பந்துவீச்சாளர் பந்தின் உயரத்தையும் கேப்டனுக்குத் துல்லியமாக விளக்க வேண்டும். ஆனால் எங்களது தகவல் தொடர்பு சரியாக இல்லை. இதை நாங்கள் போட்டி முடிந்த பிறகு விவாதித்தோம்" என்று ரிச்சர்ட் பைபஸ் கூறினார்.

பிரெஞ்சு ஓபன்.. முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாதனை!

அதே சமயம், நடுவர்களின் முடிவுகளை விமர்சிக்க அவர் மறுத்துவிட்டார். "நடுவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஐசிசி நடுவர்களின் ஒவ்வொரு முடிவையும் மிகவும் தீவிரமாக ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான கருத்துக்களை வழங்குகிறது. அதனால் நடுவர்கள் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை. நாங்கள் தான் எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
வாரத்தின் முதல்நாளே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில்
08 Jun 2026
செய்திகள்
Following a humiliating 0-2 clean sweep by Bangladesh in the recent Test
08 Jun 2026
செய்திகள்
French Open 2026: Germany's Alexander Zverev finally shattered his Grand Slam jinx,
08 Jun 2026
செய்திகள்
கி​ராமங்​கள், நகரங்​கள், மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் அண்​ணா​மலை​யின் `வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தில் உறுப்
10 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
புலத்சிங்கல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5
29 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
உலகளாவிய சவால்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மத்தியில் அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவான முறையில் முகாம
43 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net