சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தறுமாறாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆவதால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வார கடைசியில் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.230 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14070 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.