← முகப்பு செய்திகள்

French Open 2026: Germany's Alexander Zverev finally shattered his Grand Slam jinx,

🕐 08 Jun 2026 📂 செய்திகள் 10 பார்வைகள்
French Open 2026: Germany's Alexander Zverev finally shattered his Grand Slam jinx,

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன் பட்டம் வென்று தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கனவை நனவாக்கியுள்ளார். பாரீஸில் நேற்று (ஜூன் 7) நடைபெற்ற இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள 29 வயது ஸ்வெரவ், இத்தாலியின் இளம் வீரர் பிளேவியோ கோபோலியை எதிர்கொண்டார்.

சுமார் 4 மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்த இந்த மாரத்தான் ஆட்டத்தில், ஸ்வெரவ் 6-1, 4-6, 6-4, 6-7(5), 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடிய 23 வயது கோபோலி, ஸ்வெரவ்வுக்கு கடுமையான சவாலை அளித்தார். முதல் செட்டை ஸ்வெரவ் 6-1 என எளிதாகக் கைப்பற்றினாலும், அடுத்த செட்டில் அதிரடியாக மீண்டெழுந்த கோபோலி அதை 4-6 எனக் கைப்பற்றினார்.

Alexander Zverev Wins Historic French Open 2026 Title Defeating Flavio Cobolli in Five-Set Thriller

மூன்றாவது செட்டை ஸ்வெரவ் 6-4 என வென்றாலும், நான்காவது செட்டில் விடாமுயற்சியுடன் போராடிய கோபோலி டை-பிரேக்கரில் 6-7(5) என வென்று ஆட்டத்தை 5-வது செட்டிற்கு நகர்த்தினார். எனினும், இறுதிச் செட்டில் கோபோலிக்கு உடல் ரீதியாக சோர்வு ஏற்பட்டது. இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஸ்வெரவ், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 5-வது செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். வெற்றிப் புள்ளியைப் பெற்றவுடன் ஸ்வெரவ் மைதானத்தில் விழுந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இதற்கு முன்பு ஸ்வெரவ் விளையாடிய 3 கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2020 அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் டொமினிக் தீமிடமும், 2024 பிரெஞ்சு ஓபனில் கார்லோஸ் அல்காரஸிடமும், 2025 ஆஸ்திரேலிய ஓபனில் ஜானிக் சின்னரிடமும் அவர் தோல்வியடைந்திருந்தார்.

IND vs AFG: வானத்தில் பறந்த கேமராவை அடித்து உடைத்த ரிஷப் பண்ட்.. ஆப்கன் டெஸ்ட்டில் வினோத சம்பவம்

இந்தத் தோல்விகளால் அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு, தற்போது தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வென்று அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இத்தொடரில் கார்லோஸ் அல்காரஸ் காயம் காரணமாக விலகியதும், சின்னர் மற்றும் நோவக் ஜோகோவிச் முன்கூட்டியே வெளியேறியதும் ஸ்வெரவ்விற்கு சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
செய்திகள்
வாரத்தின் முதல்நாளே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில்
08 Jun 2026
செய்திகள்
Following a humiliating 0-2 clean sweep by Bangladesh in the recent Test
08 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test: Afghanistan head coach Richard Pybus admits that communication
08 Jun 2026
செய்திகள்
கி​ராமங்​கள், நகரங்​கள், மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் அண்​ணா​மலை​யின் `வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தில் உறுப்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பழைய நிலையே தொடரும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த கருத்துக்கு கம்யூனி
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
புலத்சிங்கல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net