← முகப்பு செய்திகள்

IPL 2026- Delhi Capitals beat Rajasthan Royals By 5 Wickets and advantage

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 52 பார்வைகள்
IPL 2026- Delhi Capitals beat Rajasthan Royals By 5 Wickets and advantage

டெல்லி: ஐபிஎல் 2026 தொடரின் 62வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டெல்லி அணியின் பிளேஆஃப் கனவுகளை உயிர்ப்புடன் தக்கவைத்துக் கொண்டது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸின் பிளேஆஃப் வாய்ப்புகளும் சற்று கடினமாக மாறியுள்ளது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி 46 ரன்கள் மற்றும் ரியான் பராக் (51), துருவ் ஜுரல் (51) ஆகியோரின் அரைசதங்கள் அணிக்கு வலு சேர்த்தன. விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தபோதிலும், இந்த ரன்கள் ராஜஸ்தான் அணியை வலுவான ஸ்கோரை எட்ட வைத்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் அற்புதமான பந்துவீச்சின் மூலம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் பராக், டோனோவன் ஃபெரீரா, ரவி சிங் மற்றும் தசுன் ஷனாகா ஆகியோரை வெளியேற்றினார். லுங்கி என்கிடி, மாதவ் திவாரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றினர்.

IPL 2026: வைபவ் மீது தான் கவனமா? நானும் இங்க தான் இருக்கேன்.. ஜெய்ஸ்வால் அதிரடி சாதனை

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வெற்றியை எட்டுவது எளிதாக இருக்கவில்லை. ராகுல் மற்றும் அபிஷேக் போரெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 105 ரன்கள் சேர்த்தது, ஒரு கட்டத்தில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறிய நிலையில், டெல்லிக்கு 22 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட, ஆட்டம் கடும் இறுக்கத்தை சந்தித்தது.

போட்டியின் அழுத்தம் மேலும் அதிகரித்தது. 19வது ஓவரில் டேவிட் மில்லர், பிரிஜேஷ் சர்மா பந்துவீச்சில் தசுன் ஷனாகாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பிரிஜேஷ் சர்மா தனது இரண்டாவது விக்கெட்டைக் கைப்பற்றியபோது, டெல்லி வெற்றிக்கு 11 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது, இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி அணியின் 'இம்பாக்ட் சப்' வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் களம் புகுந்தார். ஒரு ரன் அவுட்டில் இருந்து தப்பினார். இது டெல்லிக்கு சாதகமாக அமைய, கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

கடைசி ஓவரை வீச ஆடம் மில்னே களமிறங்கினார். இந்த ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு "மெதுவான ஓவர் வீதத்திற்கான அபராதம்" விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, 30 யார்டு வட்டத்திற்கு வெளியே வெறும் நான்கு ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்பட்டது. இது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஒரு பெரிய சாதகமான திருப்பமாக அமைந்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அசுதோஷ் சர்மா, ஆடம் மில்னே வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து, அடுத்த பந்திலேயே வானுயர ஒரு சிக்ஸர் அடித்து டெல்லிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். டெல்லி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்காக வென்றது.

Vaibhav sooryavanshi: ஒரே சீசனில் அதிக சிக்சர்கள்.. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி அபார சாதனை

அக்சர் பட்டேலின் பங்களிப்பும் வெற்றியில் முக்கியமானது. 18 பந்துகளில் 34 ரன்கள் குவிக்க, அசுதோஷ் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டம், ராஜஸ்தான் ராயல்ஸின் பிளேஆஃப் கனவுகளை தகர்த்தெறிந்து, டெல்லிக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இதன் மூலம் சிஎஸ்கே, ராஜஸ்தான், டெல்லி அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே 5, 6 மற்றும் 7வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net