← முகப்பு செய்திகள்

IND vs AFG Test: Young Indian spinner Manav Suthar delivers a sensational

🕐 08 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
IND vs AFG Test: Young Indian spinner Manav Suthar delivers a sensational

சண்டிகர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் தனது அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார். இவரது அசாத்திய பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேலும், 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஃபாலோ-ஆன் பெற்றது.

அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 10-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை மானவ் சுதார் படைத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் கணக்கில் பார்த்தால், இந்த மைல்கல்லை எட்டிய 7-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

IND vs AFG Test Manav Suthar Scripts History with 6-Wicket Haul on Test Debut Against Afghanistan

சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை தனது சுழலால் மானவ் சுதார் திணறடித்தார்.

ஒட்டுமொத்தமாக 22 ஓவர்கள் வீசிய மானவ் சுதார், அதில் 10 ஓவர்களை மெய்டனாக வீசி, வெறும் 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி வெறும் 1.50 என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்தும் விலகுகிறாரா சூர்யகுமார் யாதவ்? இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றம்

இவருக்குத் துணையாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஃபாலோ-ஆன் பெற்றது. இதனால் இந்திய அணி உறுதியான இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி வீறுநடை போடுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
WTC Points Table: England's 115-run victory over New Zealand at Lord's pushes
08 Jun 2026
செய்திகள்
தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் சொந்த வீடு கட்டும் சாமானிய மக்களின் கனவு
08 Jun 2026
செய்திகள்
IND vs AFG: Afghanistan Dismissed for 152; India Enforce Follow-On After Manav
08 Jun 2026
செய்திகள்
போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான் முதல்முறையாக நேரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது மேற்காசியா
08 Jun 2026
செய்திகள்
டெல்லியில் இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையி
08 Jun 2026
செய்திகள்
வாரத்தின் முதல்நாளே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில்
08 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net