← முகப்பு செய்திகள்

Ind Vs Afg- India faces Afghanistan in the 2nd ODI today in

🕐 17 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
Ind Vs Afg- India faces Afghanistan in the 2nd ODI today in

லக்னோ: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதலாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக்கைப்பற்றும் முனைப்பில் களம் காண்கிறது.

இந்திய அணி இந்த போட்டியில் மூன்று முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், இன்றைய போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

Prince Yadav receives his international cricket debut cap

அவருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக தொப்பியை வழங்கினார். தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி இப்போட்டியில் விளையாட முடியாததால், அவருக்குப் பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், குல்தீப் யாதவ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

IND vs AFG: இந்திய அணியில் 3 மாற்றம்.. பிரின்ஸ் யாதவ் அறிமுகம்.. 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்

ஆப்கானிஸ்தான் தரப்பில் தர்விஷ் ரசூலி அறிமுக வீரராக களமிறங்குகிறார். உடல்நலக்குறைவு காரணமாக முகமது நபியும், பயிற்சிப் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அஸ்மத்துல்லா ஒமர்சாயும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக தர்விஷ் ரசூலி மற்றும் பிலால் சாமி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முகமது சலீம் வீசிய ஷார்ட் பந்தை அடிக்க முயன்று பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீமின் முதல் விக்கெட்டாகும். ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக உள்ள நிலையில், அவர் தனது வாய்ப்பை வீணடித்திருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. விராட் கோலிக்கு மாற்று வீரராக அணிக்குள் வந்த ஜெய்ஸ்வால், முதல் ஒருநாள் போட்டியில் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

என்ன ஒரு சேட்டை! பைல்ஸை மாற்றி மாற்றி விளையாடிய ஹசன் அலி, பாரிஸ்டோ..பலன் அளித்ததா?

அவரைத் தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினார். ஏ.எம். கசன்ஃபர் வீசிய நான்காவது ஓவரில் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பவுண்டரிகளை விளாசினர். முகமது சலீம் வீசிய மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net