← முகப்பு செய்திகள்

FIFA: Austria registered a historic 3-1 victory over debutants Jordan in their

🕐 17 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
FIFA: Austria registered a historic 3-1 victory over debutants Jordan in their

சாண்டா கிளாரா: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ஜே பிரிவு லீக் ஆட்டத்தில், அறிமுக அணியான ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆஸ்திரியா அணி, உலகக் கோப்பை வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தியதே ஆஸ்திரியாவின் கடைசி உலகக் கோப்பை வெற்றியாக இருந்தது. அதன்பிறகு நடந்த உலகக் கோப்பை தொடர்களில் தகுதி பெறத் தவறிய ஆஸ்திரியா அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் நடைபெற்ற இப்போட்டியின் 20வது நிமிடத்தில், ஆஸ்திரியாவின் ரொமானோ ஷிமித் பாக்ஸிற்கு வெளியிலிருந்து வலது காலால் உதைத்து ஒரு பிரமாதமான கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். ஆனால், இரண்டாவது பாதி தொடங்கிய 5வது நிமிடத்தில் (50வது நிமிடம்) ஜோர்டானின் அலி ஓல்வான் ஒரு மின்னல் வேக கவுண்டர் அட்டாக் மூலம் கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமன் செய்தார். முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ஜோர்டான் ரசிகர்கள் இந்த வரலாற்று கோலை ஆக்ரோஷமாக கொண்டாடினர்.

FIFA Austria s Historic 3-1 World Cup Win Over Jordan First Victory in the Tournament in 36 Years

இதன்பின் ஆட்டம் ஆஸ்திரியாவின் பக்கம் திரும்பியது. மாற்று வீரராக வந்த மார்கோ அர்னாடோவிச் அடித்த கோல், விஏஆர் பரிசோதனையில் ஹேண்ட்பால் என அறிவிக்கப்பட்டு நடுவர்களால் மறுக்கப்பட்டது. இருப்பினும், ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீசிய கார்னர் பந்தை தடுக்க முயன்ற ஜோர்டான் டிபெண்டர் யாசன் அல் அரப், எதிர்பாராதவிதமாக பந்தைத் தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள் (ஓன் கோல்) தள்ளினார். இதனால் ஆஸ்திரியா 2-1 என முன்னிலை பெற்றது .

லியோனல் மெஸ்ஸி பிரம்மாண்ட சாதனை.. ஹாட்ரிக் கோல் ரெக்கார்டு.. அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஆஸ்திரியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்து அணியின் 3-1 என்ற அசாத்திய வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆஸ்திரியா அணி, தங்களது அடுத்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வரும் திங்கட்கிழமை டெக்சாஸ் நகரில் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ஜோர்டான் அணி அல்ஜீரியாவை எதிர்கொள்ள உள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net