வட்ஸ் அப் (Whatsapp) புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது !

by admin

on Wednesday, April 24, 2024

பயனாளர்களின் நலன் கருதி வட்ஸ் அப் (Whatsapp) செயலியானது புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்ட வட்ஸ் அப் செயலியானது அண்மைக்காலமாக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், இணைய வசதி இல்லாமல் படங்கள், வீடியோக்கள், ஆவணங்களைப் பகிரும் வசதியை வட்ஸ் அப் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூடுத்தைப் பயன்படுத்தி உருவாகி வரும் இந்தப் புதிய வசதி விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்த வசதியை செல்போனில் மட்டுமின்றிக் கணினிகளிலும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்