← முகப்பு பதிவு

வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் நேற்றைய தினம்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 50 பார்வைகள்
வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் நேற்றைய தினம்
யாழில். சட்டத்தரணிகள் பொலிஸாருக்கு டிஜிட்டல் சட்டக் கருத்தரங்கு

வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

மல்லாகம் சட்டதரணிகள் சங்கம், இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.

இணையச் சட்டம், எண்ணிமச் சான்றுகள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட, வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துதல்.

சிவில் வழக்குகளில் மின்னணு ஆதாரங்களின் ஏற்புத்தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கவுரைகள் நடைபெற்றன.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் , இலங்கை சட்டத் தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேயரத்ன மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற சட்டத்தரணி பிரபாகரன் ராமச்சந்திரன், யாழ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளிந்த டில்ருக் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கலந்துகொண்டார்.


மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net