விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி – கொழும்பு பிரதான வீதியின் தடல்லை பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸ் தடல்லை பகுதியை அடைந்தபோது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் பஸ்ஸின் கட்டுப்பாடு இழக்கப்பட்டு, வீதியை விட்டு விலகி, சுவரில் மோதியதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்ததுடன், பஸ்க்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.