← முகப்பு பதிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 58 பார்வைகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என
யாழ்.பல்கலை சித்த மருத்துவ விரிவுரையாளர் கொலை வழக்கு – மன்றில் சாட்சியம் அளித்த மகன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , விரிவுரையாளரின் மகன் மற்றும் பொலிஸார் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 3ஆம் திகதிக்கு திகதியிட்ட மன்று , விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை அன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net