← முகப்பு பதிவு

யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூர

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 52 பார்வைகள்
யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூர
யாழில். வீதியோர மரங்களின் கிளைகளை வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்குமாறு மின்சார சபையினருக்கு மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் , மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படுவதாக , மரக்கிளைகளை மின்சார சபையினர் கண்மூடி தனமாக வெட்டி வீதிகளில் விட்டு செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

அதனை அடுத்து, இனிவரும் காலங்களில் இலங்கை மின்சார சபையினர் மரக்கிளைகளை வெட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது குறித்த பிரதேச உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒன்றிணைந்து வெட்டுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலர் அறிவுறுத்தினார்

இக் கூட்டத்தில் மாநகர பிரதி முதல்வர், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net