← முகப்பு பதிவு

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 52 பார்வைகள்
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்
யாழில்.வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கி பாவனை , வாணவேடிக்கை போன்றவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,

மாவட்ட மட்டத்தில் இருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கழிவு முகாமைத்துவம் மட்டுமின்றி சுற்றாடல் சார்ந்த, சூழல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பாவிக்கப்படும் ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் மீறி பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பெரும் ஒலி எழுப்பப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்று வருகிறது.

அதிக ஒலி எழுப்பப்பட்டால் கிராம அலுவலர் ஊடாக அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பினை பிரதேச செயலாளர்கள் ஏற்க்க வேண்டும்.

மீறுவோர்கள் மீது கிராம அலுவலர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை கட்டுப்படுத்தல், குப்பைகளை எரிவூட்டுவதனால் வளி மாசடைதல் மற்றும் வாணவேடிக்கைகளைல் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வுகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
11 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net