← முகப்பு பதிவு

முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்
கொழும்பில் விளையாட்டு: உள்ளே? வெளியே??

முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (17) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபகவை, சில மணிநேரங்களிலேயே கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் , யோசித ராஜபக்சவை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணை முடியும் வரை அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனிடையே 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

முன்னதாக மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முறையாகக் கட்டமைக்கப்படாத காரணத்தினால், வழக்கினை நாளைக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குர
2 மணி நேரம் முன்னர்
பதிவு
ஜி7 நாடுகளின் தலைவர்கள், பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் என்ற ஸ்பா நகரில் நடைபெற்ற தங்களின் மூன்று நாள்
4 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.
4 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கை கடற்படை மற்றும் பிரிட்டிஷ் கடற்படை அகாதமியில் அவர் சேர்க்கப்பட்டது தொடர்பான விசாரணைக்காக இலஞ்ச ஆணைக்குழ
5 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு
7 மணி நேரம் முன்னர்
பதிவு
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனிய
8 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net