இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.
இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட புதைகுழியாக காணப்பட்டது.
இந்நிலையில் செம்மணியில் இன்றைய தினம் புதன் கிழமையுடன் 380 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..
அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 362 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.
அதேவேளை குறித்த செம்மணி மனித புதைகுழியை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினரும் , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளடங்கிய விசேட குழுவினரும் நேரில் பார்வையிட நீதிமன்றில் அனுமதி கோரி இருந்த நிலையில் அவர்களுக்கான அனுமதியை நீதிமன்று வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.