← முகப்பு செய்திகள்

பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பி

🕐 05 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பி
மாணிக்கம் தாகூர், எஸ்.வி.சேகர் அட்டாக்

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளபதிவில், 2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா? அமித் ஷாவின் அனுமதியுடன்,

மோடியின் ஆசீர்வாதத்துடன், BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி. பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது. இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள். முகமூடி மாறலாம். ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம். Plan B is ready for Tamilnadu. RSS behind it . Beware of them . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதே போன்று சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேர்மையில்லாதவர். விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் வாயைத் திறந்தாலே பொய் தான் பேசுவார். அதிமுகவின் வாக்குகளை பாஜக பெற்ற சமயத்தில், தன் தனிப்பட்ட செல்வாக்கால் தான் வாக்குகள் அதிகரித்தது என்று பொய் கூறி வருகிறார். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Gautam Gambhir confident of India Playing in WTC Final
05 Jun 2026
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Sai Sudarshan Likely to Play at No 3 for
05 Jun 2026
செய்திகள்
புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளாக என்னென்ன வைத்துள்ளார் என்பதை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
05 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net