← முகப்பு தலையங்கம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புக்குப் பின், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு இளம் பெண்ணின் கண்ணீர் கலந்த

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 46 பார்வைகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புக்குப் பின், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு இளம் பெண்ணின் கண்ணீர் கலந்த
என்றும் 18 தான்: தங்கச்சி வெளியிட்டு வீடியோவைப் பார்த்து கண்ணீர் வடித்த லட்சக் கணகான மக்கள் !

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்புக்குப் பின், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு இளம் பெண்ணின் கண்ணீர் கலந்த வீடியோ ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது. சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த 18 வயது இளம் மாணவன் ஹென்றி நோவக், ஆயுத வெறி பிடித்த விக்ரம் திக்வா (23) என்ற கொடூரனால் 8 இன்ச் சீக்கிய மத சடங்கு வாளால் ஆறு முறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கரக் கொலையை விட, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹென்றியைக் காவல்துறையினர் கைகளைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த விவகாரம் தற்போது பிரிட்டன் தாண்டி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரக் கொலையாளி விக்ரம் திக்வாவிற்கு இந்த வாரம் நீதிமன்றம் தண்டனை வழங்கியதை அடுத்து, ஹென்றியின் மூத்த சகோதரி ஒலிவியா நோவக் (22) தனது தம்பியின் நினைவாகப் பகிர்ந்த இரு டிக் டாக் (TikTok) வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. “என்றென்றும் 18 வயதுதான் என் தம்பிக்கு… உன்னை நான் எப்போதும் நேசிப்பேன், உன் பிரிவு என்னை வாட்டுகிறது” என்று அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அவர்கள் இருவரும் வீட்டில் மகிழ்ச்சியாகப் பாடி, ஆடி மகிழ்ந்த பழைய நினைவுகள், பார்ப்போரின் நெஞ்சைக் கரைய வைக்கின்றன.

கோல்ட்ப்ளேயின் ‘யெல்லோ’ (Coldplay – Yellow) பாடலின் பின்னணியில் ஒலிவியா உருவாக்கியுள்ள இந்த 53 வினாடி வீடியோவில், ஹென்றி தனது குடும்பத்தினருடன் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. எசெக்ஸ் பகுதியில் வளர்ந்து, பின்னர் உயர்கல்விக்காக சவுத்தாம்ப்டன் சென்ற அந்த துடிப்பான இளைஞன், திருமண விழாக்களிலும், வீட்டின் சமையலறை, படுக்கையறை என அனைத்து இடங்களிலும் தன் சகோதரியுடன் இணைந்து ஆடிய துள்ளலான நடனங்கள் இப்போது வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

ஆனால், இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் காவல்துறை அராஜகம் தான் பிரிட்டன் மக்களைக் கொதித்தெழச் செய்துள்ளது. ஹென்றியைக் கொடூரமாகக் குத்திவிட்டு, அவன் தான் இனவெறியோடு நடந்துகொண்டான் என கொலையாளி விக்ரம் திக்வா பழி சுமத்தியதை நம்பிய பொலிசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹென்றியைக் கைகாப்பிட்டு (Handcuff) அமுக்கியுள்ளனர். “என்னால் மூச்சுவிட முடியவில்லை” (I can’t breathe) என்று அந்த தம்பி தன் இறுதி மூச்சில் கதறியும், இரக்கமில்லாமல் நடந்துகொண்ட அதிகாரிகளின் செயல் உலகையே அதிர வைத்துள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்காவின் ஏதேச்சதிகாரத்திற்கு விழுந்த மாபெரும் அடியாக, ஈரானிய கடற்பரப்பில் கடந்த
18 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன், சக மாணவர்களால் செருப்பால் அடிக்கப்பட்டு அவமானப்படுத
41 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
உக்ரைனுக்கான இராணுவ உதவியை அதிகரிப்பதாகவும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் உள்ளிட்ட பொருளாதாரத்
50 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர் ஒருவரிடம் இருந்து 4,990,000 ரூபாய் மோசடி செய்ததாகக்
55 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
கனவில் மலை ஏறுவது, தானியங்கள் காண்பது, வெள்ளை யானை அல்லது பசு மாடு தோன்றுவது போன்ற
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது பொருளாதார மற்றும் எரிசக்தி அழுத்தத்தை அதிகரிக்க ஜி7
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net