← முகப்பு செய்திகள்

வினாத்தாள் கசிவால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்

🕐 16 Jun 2026 📂 செய்திகள் 8 பார்வைகள்
வினாத்தாள் கசிவால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்

தேர்வுத்தாள் கசிவு காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களுக்காக ராகுல் காந்தி தலைமையில் ராஜஸ்தானின் கோடா நகரில் நாளை நடைபெற உள்ள மாணவர் மாநாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “பொதுமக்களின் நலனில் அக்கறையும் பொறுப்பும் உள்ள நாம் அனைவரும் மாணவர்களுடன் துணை நிற்க வேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் துயரங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தேர்வுக்கு முன்பும் வினாத்தாள் கசியவிடப்படுகிறது. அதேவேளையில், தேர்வில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் கடன் வாங்குகிறார்கள். கல்வியை தொடர்ந்து கற்க பெரும் நிதிச் சுமையை சுமக்கிறார்கள். ஆனாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லை. இது ஓர் ஆழமான கட்டமைப்புச் சார்ந்த பிரச்சினை.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வினாத்தாள் கசிவு என்பது ஏதோ ஒரு தேர்வில் மட்டும் நடப்பதல்ல. அது ஒவ்வொரு தேர்விலும் நடைபெறுகிறது. எனவே, நாம் அனைவரும் உண்மையாகவே மாணவர்களுக்கு துணை நின்று, ஆதரவளித்து, மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக்கொணரும் நோக்கில் பல்வேறு தொடர் மாநாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net