வெள்ளை அறிக்கை வெளியிட்டு அவர் பேசியதாவது: வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது. வரவை விட செலவை கட்டுப்படுத்துவதே முக்கியம் என திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வரவைக் காட்டிலும் செலவே அதிகமாக உள்ளது. 2021 – 2026 வரையிலான காலகட்டத்தில் மாநில சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தமிழக அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது. ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 28.3% கடன் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கடன் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழக வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன், ரூ.78 ஆயிரத்து 324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. வரலாறு காணாத உச்சம் ஆகும்.அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது.பொதுத்துறை நிறுவன கடனையும் சேர்த்தால் மாநிலத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி.
தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபரின் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாய் கடன் உள்ளது.முந்தைய அரசு முதலீட்டுக்கு அல்லாமல் அன்றாட செலவுக்கு கடன் வாங்கி உள்ளது.தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.67 ஆயிரம் கோடி வட்டி மட்டும் செலுத்துகிறது.கனிம வளத்துறையில் வருவாய் இழப்பு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.கனிம வளத்துறையில் நடந்த ஊழல் வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் வருவாயை பெருக்கவில்லை.
அண்டை மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் ஜிஎஸ்டியும் குறைவாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை. மாநில ஜிடிபியில் மொத்த வருவாய் அளவு 10ல் இருந்து 8.32 சதவீதம் ஆக சரிவு. கடந்த ஆட்சியில் தனிநபர் கடன் 92 சதவீதம் உயர்ந்துள்ளது. பத்திரப்பதிவில் வழிகாட்டு மதிப்பு குறைக்கப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. என தொடர்ந்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.