← முகப்பு தலையங்கம்

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் நலனே எப்போது

🕐 12 Mar 2026 📂 தலையங்கம் 86 பார்வைகள்
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் நலனே எப்போது

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் நலனே எப்போதும் எமக்கு முதன்மையானது என்றும், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து இந்திய மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், கொரோனா பெருந்தொற்றை 140 கோடி மக்கள் எப்படி ஒற்றுமையுடன் முறியடித்தார்களோ, அதேபோல இச்சவாலையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் நலனே எப்போதும் எமக்கு முதன்மையானது என்றும், வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் ஆளும் திமுக அரசை கடுமையாகச் சாடிய பிரதமர், தமிழ்நாடு தற்போது ஒரே குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். தி.மு.க.வின் அறிவியல் ஊழல் முறைமை மூலம் திரட்டப்படும் பணம் அனைத்தும், ஆறுகள் கடலில் கலப்பது போல ஒரு குடும்பத்திடமே சென்றடைவதாகவும் அவர் விமர்சித்தார்.

அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மாறினாலும் அதிகாரம் மட்டும் ஒரு குடும்பத்தைச் சுற்றியே இருப்பதாகவும், இது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைச் சிதைப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் மற்றும் காவிரி டெல்டா விவகாரங்களில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறிய பிரதமர், இயற்கை வளங்களை அழிக்கும் மணல் கொள்ளைக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளையில், தமிழகத்தின் வளர்ச்சிக்காக 2014 முதல் மத்திய அரசு சுமார் 3இலட்சம் கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதை அவர் பட்டியலிட்ட அவர் தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள் மற்றும் மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா மேம்படும் என்றும், குறிப்பிட்டார்.

குறிப்பாக 'மதுரை மல்லி' போன்ற உள்ளுர் பொருட்கள் சர்வதேச சந்தைக்குச் செல்ல வழிவகை செய்யப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jun 2026
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று ஒருநாள்,
04 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net