← முகப்பு தலையங்கம்

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று ஒருநாள்,

🕐 04 Jun 2026 📂 தலையங்கம் 4 பார்வைகள்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று ஒருநாள்,

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று ஒருநாள், மூன்று இருபது20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், இருபது20 (T20I) மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகளுடன் ஜனவரி 16 ஆம் திகதி தொடங்கும் இந்தத் தொடரில், மூன்று இருபது20 போட்டிகள் மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

ஒருநாள் போட்டிகள் ஜனவரி 16, 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதற்கான முதல் ஒருநாள் போட்டி நெபீரிலும், இரண்டாவது போட்டி வெலிங்டனிலும், மூன்றாவது போட்டி டுனேடினிலும் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து, இருபது20 போட்டிகள் ஜனவரி 26, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றன. முதல் இருபது20 போட்டி கிரிஸ்ட்சேர்ச்சிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் நெல்சனிலும் நடைபெறும். பின்னர், டெஸ்ட் போட்டிகள் பெப்ரவரி மாதத்தில் தொடங்குகின்றன.

முதல் டெஸ்ட் போட்டி பெப்ரவரி 4 முதல் 8 வரை டவுரங்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 12 முதல் 16 வரை ஹெமில்டனிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அட்டவணையின்படி, இலங்கை அணி நியூசிலாந்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் கலந்துகொள்ளவுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
04 Jun 2026
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரான் மற்றும் குவைத் நாடுகளுக்கு
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net