← முகப்பு செய்திகள்

திமுக எம்எல்ஏ தொகுதி என தெரியாமல், தனது தொகுதி என நினைத்து நன்றி சொன்ன தவெக

🕐 04 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
திமுக எம்எல்ஏ தொகுதி என தெரியாமல், தனது தொகுதி என நினைத்து நன்றி சொன்ன தவெக
தொகுதி மாறி நன்றி சொன்ன தவெக அமைச்சர்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கம்யூ, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் ஆதரவுடன் கூட்டணி அமைச்சரவை தவெக அமைத்துள்ளது. முதலமைச்சர் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், விஜயின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார்.

அமைச்சர் ஸ்ரீநாத், தொகுதி மாறிச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அமைச்சர் ஸ்ரீநாத் தனது தொகுதி மக்களிடம் நேரில் நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தார். அப்போது மாறுதலாக, திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட புன்னக்காயல் பகுதி மக்களிடமும் அவர் நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அதிமுகவும் ஐடி விங்க் பக்கத்தில், ‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக்கூட அறியாமல், திமுகவைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றிபெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. என விமர்சனம் செய்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net