இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். 2024-ஆம் ஆண்டு டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான இந்திய அணி பல தொடர்களில் வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக 2025ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றிலும் சூர்யகுமார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
அணி வெற்றி பெற்ற போதிலும் இந்த தொடர்களில் சூர்யகுமாரில் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில், சூர்யகுமார் யாதவ் 13 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.
சூர்யகுமார் ஃபார்ம் மற்றும் இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் ஸ்ரோயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் நியமிக்கப்பட்டால், திலக் மற்றும் இஷான் ஆகியோரில் ஒருவர் இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.