← முகப்பு தமிழ்

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்

🕐 04 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள்

இந்த அரசாங்கத்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை நாட்டு மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் தேர்தல் மூலம் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களுக்கே தற்போது இவர்களின் இயலாமை மற்றும் வாய்ச் சவடால்கள் குறித்து நன்கு தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தனது தோல்விகளை மேலும் மேலும் பொய்களைக் கூறி மூடிமறைக்க முயலக் கூடாது எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தை அடித்து விரட்டும் வரை அல்லது அரசாங்கம் ஒளிந்து கொள்ளும் நிலை ஏற்படும் வரை காத்திருக்காமல், நாட்டை நிர்வகிக்கக் கூடிய தகுதியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தங்களது தலைவர் திலீத் நாட்டை இப்போதே பொறுப்பேற்று வழிநடத்துவதற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நளின் பத்திரண, நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரக் கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, மேலும் காலத்தைக் கடத்தாமல் நாட்டைத் தகுதியானவர்களிடம் ஒப்படைத்து, மக்களை மேலும் வறுமை மற்றும் துன்பப் படுகுழியில் தள்ளும் இந்தச் செயல்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதா
22 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net