← முகப்பு செய்திகள்

தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை
தலசீமியா பரிசோதனை திருமணத்திற்கு முன் அவசியம்

தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

அரச வைத்தியசாலைகளில் இந்நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை, இரத்தமாற்றம் மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே முழுமையான சிகிச்சை வாய்ப்பாக இருப்பினும், அது குறைந்தளவிலானவர்களுக்கே சாத்தியமாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தலசீமியா மரபணு இரு பெற்றோரிடமிருந்தும் கிடைக்கும் போது குழந்தைகளில் கடுமையான நோய் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இது தொற்றுநோயல்ல என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net