← முகப்பு செய்திகள்

தங்கம், வெள்ளி விலை இன்று குறைந்து இருப்பது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

🕐 05 Jun 2026 📂 செய்திகள் 10 பார்வைகள்
தங்கம், வெள்ளி விலை இன்று குறைந்து இருப்பது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை சரிவு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தறுமாறாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆவதால் முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.160 குறைந்து, தங்கம் சவரன் ரூ.1,15,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,480 விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.5 குறைந்து, கிராம் ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net