← முகப்பு பதிவு

இவ்வாண்டின் இறுதிக்குளந மாகாணசபை தேர்தலை நடாத்தி முடிப்போமென அனுர அரசு அறிவித்து தொடர்ந்தும் வலியுறுத்திவருகின

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 62 பார்வைகள்
இவ்வாண்டின் இறுதிக்குளந மாகாணசபை தேர்தலை நடாத்தி முடிப்போமென அனுர அரசு அறிவித்து தொடர்ந்தும் வலியுறுத்திவருகின
மாகாணசபை தேர்தல் நடக்குமா?

இவ்வாண்டின் இறுதிக்குளந மாகாணசபை தேர்தலை நடாத்தி முடிப்போமென அனுர அரசு அறிவித்து தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மே 21ம் திகதி விசேட நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவரான அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில்;குழு முன்னரும் பல தடவைகள் கூடியிருந்தது.

அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விசேட குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். அதன்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட ரீதியான தடைகள் குறித்து விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net