← முகப்பு இன்றைய ராசிபலன்

Venus Transit In Cancer On 08 June 2026: ஜூன் 08 ஆம் தேதி

🕐 08 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 4 பார்வைகள்
Venus Transit In Cancer On 08 June 2026: ஜூன் 08 ஆம் தேதி

Venus Transit In Cancer On 08 June 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.

இந்த சுக்கிரன் இதுவரை மிதுன ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் ஜூன் 08 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த கடக ராசியில் சுக்கிரன் ஜூலை 04 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சுத்திறன் மேம்படும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். இது தொழில் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இட மாற்றம் அல்லது பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

Venus Transit In Cancer On 08 June 2026 Effects On 12 Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வீட்டு சூழல் அமைதியாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், பணிபுரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உறவுகள் வலுவடையும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் எந்த ஒரு முடிவுகளை எடுக்கும் முன்பும் கவனமாக பலமுறை யோசித்து பின் எடுக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.

Venus Transit In Cancer On 08 June 2026 Effects On 12 Zodiac Signs

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை, தொழில் இரண்டிலும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் கையில் பணம் அதிகம் சேரும்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சவாலாக இருக்கும். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். தொழில் வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளை கவனமாக கையாள வேண்டும்.

Venus Transit In Cancer On 08 June 2026 Effects On 12 Zodiac Signs

மகரம்

மகர ராசியினி 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். தொழில் வாழ்க்கை சாதகமாக இருக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் அதிகரிக்கும். பொறுமையாக எதையும் செய்தால் வெற்றி கிடைக்கும். சண்டைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளிடமிருந்தும் நல்ல செய்திகள் வரக்கூடும். செலவுகள் அதிகரிக்கும். பண பரிவர்த்தனை விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net