← முகப்பு செய்திகள்

Ind vs AFG- Afghanistan captain Hashmatullah Shahidi speaks about team experience and

🕐 08 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
Ind vs AFG- Afghanistan captain Hashmatullah Shahidi speaks about team experience and

சந்திகார்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டரை நாட்களுக்குள் போட்டி முடிவடைந்துவிட்டது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் தனது துல்லியமான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

போட்டி முடிவடைந்த பிறகு ஆப்கானிஸ்தாடன கேப்டன் ஹஸ்மதுல்லா "இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு எனது வாழ்த்துகள். இது எங்களுக்கு ஒரு கடினமான நாள் மற்றும் கடினமான போட்டியாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். போட்டியின் ஆரம்பத்திலிருந்தே, பந்துவீச்சில் எங்களிடம் சரியான discipline இல்லை. அதனால் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், இந்த வகை போட்டிகளில் எங்களுக்குப் போதிய அனுபவம் இல்லை. இந்த போட்டியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், ஏனென்றால் எங்களுக்கு இந்த வடிவிலான போட்டிகளில் விளையாட போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் இந்திய அணி அவர்களின் சொந்த மண்ணில் மிகவும் வலிமையான அணி என்பது அனைவருக்கும் தெரியும்.

IND vs AFG: இந்திய அணி வரலாற்று சாதனை.. இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் தோல்வி

இந்தப் போட்டி எங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அழுத்தமான சூழலில் எப்படி விளையாடுவது என்பதை நாங்கள் பழகிக்கொள்வோம் என்று நம்புகிறேன். ஏனெனில், நாம் வெற்றி பெறத் தொடங்கும்போது சவால்கள் இன்னும் கடினமாகிக்கொண்டே இருக்கும்.

ஆமாம், எங்களிடம் சில நேர்மறையான விஷயங்கள் இருந்தன, குறிப்பாக சலீம், இதற்கு முன்பு அவர் அணியில் இருந்தார், ஆனால் சுற்றுப்பயணத்தின் இடையில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. அவர் மீண்டு வந்து பந்துவீசிய விதம் ஒரு சிறந்த comeback ஆக இருந்தது. அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பேட்டிங்கில், ரஹ்மத் (Rahmat) முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினார், இரண்டாவது இன்னிங்ஸில் செதிக் (Sediq) நன்றாக விளையாடினார்.

IND vs AFG: எங்களுக்கு இது முழுமையான வெற்றி.. இளம் வீரர்கள் சாதித்துவிட்டார்கள்.. கேப்டன் கில் பாராட்டு

மானவ் சுதர் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் (stump to stump) மிகவும் துல்லியமாகப் பந்துவீசினார். அதனால்தான் நாங்கள் அவருக்கு எதிராகத் திணறினோம். ஆடுகளத்தின் தன்மையும் ஒவ்வொரு செஷனுக்கும் மாறிக் கொண்டிருந்தது. ஸ்கோர்போர்டு அழுத்தமும் (scoreboard pressure) இருந்தது, அதே நேரத்தில் ஆடுகளத்தின் தன்மையும் மாறிக்கொண்டே இருந்ததால், அவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது எங்களுக்குக் கடினமாக இருந்தது." என்று கூறினார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net