← முகப்பு இன்றைய ராசிபலன்

Vaikasi Matha Rasi Palan 2026: சூரியன் மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 52 பார்வைகள்
Vaikasi Matha Rasi Palan 2026: சூரியன் மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள்

Vaikasi Matha Rasi Palan 2026: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் இந்த நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. இதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன்.

இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இந்நிலையில் சூரியன் மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சூரியன் சுக்கிரனின் ரிஷப ராசிக்குள் நுழையும் போது தமிழ் மாதமான வைகாசி பிறக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் சூரியன் சுக்கிரனின் ராசியில் இருப்பதால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும்.

குறிப்பாக 4 ராசிக்காரர்கள் சூரியனின் அருளால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பதோடு, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளனர். இப்போது வைகாசி மாதத்தில் சூரியனின் அருளால் வருமானத்தில் உயர்வைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Vaikasi Matha Rasi Palan 2026 Sun Transit In Taurus Will Increase Income Of These Zodiac Signs

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதமானது சிறப்பாக இருக்கும். முக்கியமாக நிதி நிலைமை வலுவடையும். வீடு, வாகனம் போன்ற புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Vaikasi Matha Rasi Palan 2026 Sun Transit In Taurus Will Increase Income Of These Zodiac Signs

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மேம்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பண பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையே சமநிலையை பேண முடியும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதுவரை சந்தித்து வந்த உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

Vaikasi Matha Rasi Palan 2026 Sun Transit In Taurus Will Increase Income Of These Zodiac Signs

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தில் நிதி நிலைமை மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இம்மாதத்தில் செய்யும் புதிய முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்களி மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.

Vaikasi Matha Rasi Palan 2026 Sun Transit In Taurus Will Increase Income Of These Zodiac Signs

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தில் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும். இதனால் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையையும் நேர்மையுடனும், விடாமுயற்சியுடனும் செய்வீர்கள். இந்த வைகாசி மாதத்தில் வாழ்க்கை குறித்த உங்களின் கண்ணோட்டம் மேம்படும். குடும்பத்தினருக்கு பரிசுகளை வாங்கி கொடுத்து மகிழ்ப்பீர்கள். இருப்பினும், இதனால் உங்களின் வருமானமோ, சேமிப்போ பாதிக்கப்படாது. புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net