← முகப்பு தமிழ்

(எம்.மனோசித்ரா)நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த இக்கட்

🕐 05 Jun 2026 📂 தமிழ் 6 பார்வைகள்

நாடு தற்போது அனைத்துத் துறைகளிலும் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் 220 இலட்சம் மக்களைப் பற்றி சிந்தித்து நாட்டை மீட்பதற்கு மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,

பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வறுமையும் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட மூன்று வேளை உணவைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும், நாடு இன்று பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

நாட்டின் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, சில சுயநல மற்றும் அற்பவாத சக்திகள் இலங்கையின் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்கும், நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனினும், ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் எமக்குள்ளே பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டைப் பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் இணைந்து அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தயாராக உள்ளார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

மேலும், எமது நாட்டில் பௌத்த சாசனத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பாதுகாத்து அதனை வலுப்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். ஏனைய மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பும் எமது உச்ச சட்டமான அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனம், மதம், கலாச்சாரம் என எந்தவொரு வேறுபாடும் இன்றி அனைத்துத் தரப்பினரினதும் நல்லிணக்கத்துடனேயே இந்த வெசாக் ஊர்வலம் நடைபெறுகிறது. இத்தகைய நல்லிணக்கமும் சகோதரத்துவமுமே இலங்கையின் ஒற்றையாட்சி, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் எல் நினோ விளைவுகள் தொடங்கிவிட்டதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
05 Jun 2026
📰
தமிழ்
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சு
05 Jun 2026
📰
தமிழ்
சில பாடல்கள் கலை வெளிப்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என வாதிடுவது யதார்த்தத
05 Jun 2026
📰
தமிழ்
அரிதான அல்பினோ வகை எருமை மாடு ஒன்றிற்கு, அமெரிக்க ஜனாதிபதி “டொனால்ட் ட்ரம்ப்” இன் பெயர்
05 Jun 2026
📰
தமிழ்
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து பதவி விலகியதையடுத்துபுதிய இயக்கம்
05 Jun 2026
📰
தமிழ்
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய
05 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net