← முகப்பு இன்றைய ராசிபலன்

Sun's Aspect: ஜூன் மாதத்தில் சூரியனின் பார்வையால் சில ராசிக்காரர்கள் அபாரமான முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 20 பார்வைகள்
Sun's Aspect: ஜூன் மாதத்தில் சூரியனின் பார்வையால் சில ராசிக்காரர்கள் அபாரமான முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத

Sun's Aspect: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இப்படிப்பட்ட சூரியன் புகழ், அதிகாரம், பண வரவு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணியாவார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம். அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் சூரிய பெயர்ச்சியின் போது சூரியனின் பார்வையால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அந்த வகையில் ஜூன் மாதத்தில் சூரியனின் பார்வையால் சில ராசிக்காரர்கள் அபாரமான முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

சூரியனின் பார்வை நேரடியாக விழுவதால், இதுவரை வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வந்த சில ராசிக்காரர்கள் திடீர் உயர்வைக் காணவுள்ளார்கள். அதுவும் நிதி நிலையில் உயர்வு, தொழில் முன்னேற்றம், குடும்ப சந்தோஷம் போன்றவற்றை காணவுள்ளனர். இப்போது சூரியன் பார்வையால் ஜூன் மாதத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Sun s Aspect People Of These Zodiac Signs Get More Benefits From June 2026

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சூரியனின் பார்வையால் வாழ்வில் பெரிய மாற்றத்தைக் காண்பார்கள். அதுவும் தொழில் மற்றும் நிதி நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த பதவி உயர்வு இனி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு இம்மாதத்தில் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் சிறப்பான பலனைத் தரும்.

Sun s Aspect People Of These Zodiac Signs Get More Benefits From June 2026

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியான சூரியனின் பார்வையால் ஜூன் மாதமானது பொற்காலமாக இருக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். இம்மாதத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் குவியும். இனி ஜூன் முதல் பண வரவு அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிரிகளும் நண்பராக மாறக்கூடும். முக்கியமாக இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் மேம்படும்.

Sun s Aspect People Of These Zodiac Signs Get More Benefits From June 2026

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் பார்வையால் ஜூன் மாதத்தில் நல்ல அதிர்ஷ்டமும், பண வரவும் இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இம்மாதத்தில் முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இம்மாதத்தில் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு வேலை வெற்றிகரமாக முடிவடையும்.

கடன் பிரச்சனைகள் தீரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கூட கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாதம் முதல் வாழ்வில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net