← முகப்பு இன்றைய ராசிபலன்

Sun Transit 2026 In Taurus Between Rahu Ketu: சூரியன் ரிஷப ராசிக்குள் நுழையும்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 30 பார்வைகள்
Sun Transit 2026 In Taurus Between Rahu Ketu: சூரியன் ரிஷப ராசிக்குள் நுழையும்

Sun Transit 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன்.

சூரியன் ரிஷப ராசிக்குள் நுழையும் போது தமிழ் மாதமான வைகாசி பிறக்கிறது. அதுமட்டுமின்றி இந்த சூரிய பெயர்ச்சி சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த ராசியில் சூரியன் செல்லும் போது, புதனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகம் உருவாவதோடு, சனியின் சிறப்பு பார்வை சூரியன் மீது விழுகிறது. அதுமட்டுமல்லாமல், சூரியன் ராகு மற்றும் கேதுவிற்கு இடையில், அதுவும் மையத்தில் பயணிக்கவுள்ளார்.

அதாவது தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் உள்ளனர். இந்த அரிய நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் 5 ராசிக்காரர்கள் சூரியனின் இந்த நிலையால் நல்ல அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Sun Transit 2026 In Taurus Between Rahu Ketu List Of lucky Zodiac Signs

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். அதுவும் ராகு-கேதுவிற்கு இடையே சூரியன் பயணிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு வேலையையும் மிகவும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் குடும்பத்தினருடனான உறவு சிறப்பாக இருக்க சிறிது முயற்சிக்க வேண்டும்.

Sun Transit 2026 In Taurus Between Rahu Ketu List Of lucky Zodiac Signs

கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். அதுவும் ராகு-கேதுவிற்கு இடையே சூரியன் பயணிப்பதால், இந்த ராசிக்காரர்களின் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றி பெறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. பண பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனுக்கு பாராட்டும், புகழும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

Sun Transit 2026 In Taurus Between Rahu Ketu List Of lucky Zodiac Signs

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். அதுவும் ராகு-கேதுவிற்கு இடையே சூரியன் பயணிப்பதால், இந்த ராசிக்காரர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட கால ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும் வாய்ப்புள்ளது. மேலும் கடின உழைப்புக்கான நல்ல பலனும் கிடைக்கும். இதன் மூலம் சந்தோஷம் பெருகும். நிதி நிலையை வலுப்படுத்த சிக்கமான இருப்பீர்கள். இது சற்று கடினமாக இருந்தாலும், எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். வீட்டுச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

Sun Transit 2026 In Taurus Between Rahu Ketu List Of lucky Zodiac Signs

தனுசு

தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். அதுவும் ராகு-கேதுவிற்கு இடையே சூரியன் பயணிப்பதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையை வலுப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன் உடனே கிடைக்கும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள்.

Sun Transit 2026 In Taurus Between Rahu Ketu List Of lucky Zodiac Signs

மீனம்

மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். அதுவும் ராகு-கேதுவிற்கு இடையே சூரியன் பயணிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் நல்ல பெயல் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. குடும்ப சூழல் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வெற்றிகள் குவியும், பண வரவு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net