← முகப்பு இன்றைய ராசிபலன்

Shani Jayanti 2026: 2026 ஆம் ஆண்டில் சனி ஜெயந்தியானது மே 16 ஆம் தேதி

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 38 பார்வைகள்
Shani Jayanti 2026: 2026 ஆம் ஆண்டில் சனி ஜெயந்தியானது மே 16 ஆம் தேதி

Shani Jayanti 2026: நவகிரகங்களில் நீதிமான் என்று கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் பிறந்த தினம் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதுவும் சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்தார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் சனி ஜெயந்தியானது மே 16 ஆம் தேதி வருகிறது.

அதுவும் இந்த அமாவாசை திதியானது மே 16-ஆம் தேதி காலை 5:11 மணிக்குத் தொடங்கி, மே 17ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு முடிவடையும். முக்கியமாக இந்த சனி ஜெயந்தி சனிக்கிழமை அன்று வருவது மிகவும் அரிதானது மற்றும் மிகவும் சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. சனி பகவானின் பிடியில் சிக்கி அவதிப்படுபவர்கள் இந்த சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை வழிபாடு செய்தால், ஓரளவு நிவாரணம் கிடைத்து, சனி பகவானின் அருள் கிடைக்கும்.

ஜோதிடத்தின் படி, இந்த சனி ஜெயந்தி நாளில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் இரண்டு முறை நிலையை மாற்றவுள்ளார். அதுவும் சந்திரன் மே 16 அன்று மாலை 5:29 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்து, இரவு 10:46 மணிக்கு ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். இப்படி சனி ஜெயந்தி நாளில் இரண்டு முறை நடக்கும் சந்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சனி ஜெயந்தி நாளில் இருமுறை நடக்கும் சந்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Shani Jayanti 2026 Double Transit Of Moon Will Bring Wealth And Prosperity To These Zodiac Signs

மிதுனம்

சனி ஜெயந்தி நாளில் இருமுறை நடக்கும் சந்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மேலும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது மற்றும் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் உறவுகள் வலுபெறும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.

Shani Jayanti 2026 Double Transit Of Moon Will Bring Wealth And Prosperity To These Zodiac Signs

துலாம்

சனி ஜெயந்தி நாளில் இருமுறை நடக்கும் சந்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்கள் வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலைமை வலுவடையும். சொத்து விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

Shani Jayanti 2026 Double Transit Of Moon Will Bring Wealth And Prosperity To These Zodiac Signs

மகரம்

சனி ஜெயந்தி நாளில் இருமுறை நடக்கும் சந்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் படிப்படியாக முடிவடையும். உறவுகளில் உள்ள தவறான புரிதல்கள் நீங்கி, உறவுகள் வலுவடையும். மன அழுத்தம் குறையும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக நடக்கும்.

Shani Jayanti 2026 Double Transit Of Moon Will Bring Wealth And Prosperity To These Zodiac Signs

கும்பம்

சனி ஜெயந்தி நாளில் இருமுறை நடக்கும் சந்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் படிப்பு மற்றும் தொழில் ஆகிய இரண்டிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்ளவோ அல்லது அவர்களுடன் நேரத்தை செலவிடவோ வாய்ப்பு கிடைக்கும். இது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net