← முகப்பு இன்றைய ராசிபலன்

Mercury Transits 3 Times In a Week: மே மாதத்தில் புதன் ஒரே வாரத்தில்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 34 பார்வைகள்
Mercury Transits 3 Times In a Week: மே மாதத்தில் புதன் ஒரே வாரத்தில்

Mercury Transits: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் 21 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் மே மாதத்தில் புதன் ஒரே வாரத்தில் 3 முறை தனது நிலையை மாற்றவுள்ளார். அதில் மே 7 ஆம் தேதி புதன் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். அதன் பின் மே 13 ஆம் தேதி புதன் கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து மே 15 ஆம் தேதி புதன் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி ஒரே வாரத்தில் 3 முறை பெயர்ச்சியாகும் புதனின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்கள் வாழ்விலும் காணப்படும். முக்கியமாக 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Mercury Transits 3 Times In a Week List Of Lucky Zodiac Signs

ரிஷபம்

ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை ஏதாவது மன வருத்தத்தில் இருந்தால், இந்த வாரத்தில் நிலைமை படிப்படியாக மேம்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவுகள் வலுபெறும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

Mercury Transits 3 Times In a Week List Of Lucky Zodiac Signs

கடகம்

ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய தொழிலை தொடங்குவதற்கு இக்காலகட்டம் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். வணிகத்தில் நன்கு யோசித்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தால், இந்த வாரத்தில் அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Mercury Transits 3 Times In a Week List Of Lucky Zodiac Signs

கன்னி

ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலைகளில் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Mercury Transits 3 Times In a Week List Of Lucky Zodiac Signs

கும்பம்

ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக அற்புதமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுபெறும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. எடுத்த வேலைகள் ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net