லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அதிரடி சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 ரன்கள்) ஏமாற்றம் அளித்த போதிலும், கேப்டன் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 71 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் விளாசி இஷான் கிஷன் தனது 2வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் தனது 33வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை இஷான் கிஷன் கடந்தார். இந்தப் போட்டிக்கு முன்பாக அவர் 28 போட்டிகளில் விளையாடி 967 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட அவர் எதிர்கொண்ட ஒட்டுமொத்த பந்துகளின் எண்ணிக்கை 966 ஆகும். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி செய்த செயல்.. என் பீல்டிங் பற்றியா பேசுறீங்க? விமர்சகர்களுக்கு பதிலடி
கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் சதம் அடித்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 36வது ஓவரிலேயே இந்திய அணி 300 ரன்களை கடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 400 ரன்களை கடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.