← முகப்பு செய்திகள்

India vs Afghanistan: India posted a massive 402 runs against Afghanistan in

🕐 17 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
India vs Afghanistan: India posted a massive 402 runs against Afghanistan in

லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷனின் அசாத்திய சதங்களால் இந்திய அணி 402 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் உலக சாதனை படைத்தது. ஆனால், கடைசி சில ஓவர்களில் இந்திய பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல சரிந்து ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் 40 ஓவர்கள் தங்கமானதாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஜோடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது. 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 224 ரன்கள் குவித்து இமாலய பார்ட்னர்ஷிப் அமைந்தது. சுப்மன் கில் 110 பந்துகளில் 22 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 154 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 79 பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 125 ரன்கள் விளாசினார்.

India vs Afghanistan 2nd ODI Shubman Gill and Ishan Kishan Hundreds Power Team India to Historic 402

முதல் 36 ஓவர்களில் இந்திய அணி 320 ரன்கள் குவித்ததால், இன்னிங்ஸ் முடிவில் 450 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 37வது ஓவரில் இஷான் கிஷன் அவுட்டான பிறகு ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. 40 ஓவர்கள் வரை வலுவாக இருந்த இந்தியா, கடைசி 10 ஓவர்களில் மிக மோசமாக சரிந்தது.

கடைசி 7 ஓவர்களில் இந்திய அணி வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக 43வது ஓவரில் சுப்மன் கில் (154) மற்றும் கேஎல் ராகுல் (0) ஆகிய இருவரையும் நங்கேயாலியா கரோட்டி அடுத்தடுத்து அவுட் செய்தார். இதன் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் (26), வாஷிங்டன் சுந்தர் (19), குர்னூர் பிரார் (3), அர்ஷ்தீப் சிங் (3) என அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

கடைசி 3 ஓவர்களில் ரன் ஏதும் வராமல் வெறும் 15 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் நங்கேயாலியா கரோட்டி 4 விக்கெட்டுகளையும் (4/76), ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும் (3/48) வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

IND vs AFG: இஷான் கிஷன் அதிரடி செஞ்சுரி.. ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்தார்.. 1000 ஒருநாள் ரன்கள்

இந்தப் போட்டியில் 402 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த அணிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து இந்தியா முதலிடத்தைப் பிடித்து உலக சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா / இந்தியா – 8 முறை
இங்கிலாந்து – 7 முறை
ஆஸ்திரேலியா – 3 முறை

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net