← முகப்பு இன்றைய ராசிபலன்

Mars Jupiter Make Tri Ekadash Yoga In June 2026: 2026 ஆம் ஆண்டின்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 28 பார்வைகள்
Mars Jupiter Make Tri Ekadash Yoga In June 2026: 2026 ஆம் ஆண்டின்

Tri Ekadash Yoga In June 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்கள் அடிக்கடி மற்ற கிரகங்களுடன் ஒரே ராசியில் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் மூலமோ யோகங்களை உருவாக்கி, மனித வாழ்வில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஒரு சக்தி வாய்ந்த யோகம் உருவாகவுள்ளது. அதுவும் இந்த யோகமானது ஜூன் 28 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மற்றும் தேவர்களின் குருவான குரு பகவானால் உருவாகவுள்ளது. அது தான் திரிஏகாதச யோகம். இந்த யோகமானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

முக்கியமாக இந்த யோகமானது நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, வாழ்வில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் கொண்டு வரும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் தங்கள் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைப் பெறவுள்ளனர். இப்போது ஜூன் இறுதியில் உருவாகும் திரிஏகாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Mars Jupiter Make Tri Ekadash Yoga In June 2026 List Of Lucky Zodiac Signs

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் மன அமைதி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். வீட்டு சூழல் சந்தோஷமாகவும், இனிமையாகவும் இருக்கும். நிதி நிலைமை மேம்படும். பண பிரச்சனைகள் குறையும். வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்லாம். மொத்தத்தில் இந்த யோகத்தால் மன நிம்மதி கிடைப்பதோடு, குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும்.

Mars Jupiter Make Tri Ekadash Yoga In June 2026 List Of Lucky Zodiac Signs

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில் இக்காலம் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு சிறந்த நேரமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். மன அழுத்தம் குறையும். வீட்டு சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் நல்ல உயரத்தை அடையலாம்.

Mars Jupiter Make Tri Ekadash Yoga In June 2026 List Of Lucky Zodiac Signs

மீனம்

மீன ராசிக்காரர்கள் திரிஏகாதச யோகத்தால் பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இதன் மூலம் மன அழுத்தம் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவுகள் மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net