← முகப்பு இன்றைய ராசிபலன்

Kendra Trikon Rajyog On 15 May 2026: புதன் மே 15 ஆம் தேதி

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 28 பார்வைகள்
Kendra Trikon Rajyog On 15 May 2026: புதன் மே 15 ஆம் தேதி

Kendra Trikon Rajyog 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட புதன் ஒரு ராசியில் குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பார். சொல்லப்போனால் நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் ஒருவரது தொழிலில், பேச்சில் நன்கு தெரியும்.

தற்போது புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் சூரியனுடன் ஒன்றிணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார். இதனால் சில வீடுகளில் கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். இப்படி உருவாகும் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.

வேத நாட்காட்டியின் படி, புத்திகாரகனான புதன் மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்து, அந்த ராசியில் மே 29 ஆம் தேதி வரை இருப்பார். அதன் தன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைவார். வேத ஜோதிடத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் கேந்திர வீடுகள் (1,4,7,10) மற்றும் திரிகோண வீடுகளின் (1,5,9) அதிபதிகளுக்கு இடையே சேர்க்கை, பார்வை அல்லது இடமாற்றம் ஆகியவற்றால் தொடர்பு கொள்ளும் போது கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தால் சந்தோஷம், செழிப்பு, தொழிலில் முன்னேற்றம் போன்றவை கிடைக்கும். இப்போது புதனால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Kendra Trikon Rajyog On 15 May 2026 These Zodiac Signs Will Be Lucky

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்றதும், புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இக்காலத்தில் எதிர்காலம் குறித்த சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Kendra Trikon Rajyog On 15 May 2026 These Zodiac Signs Will Be Lucky

கும்பம்

கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்று புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஒவ்வொரு முயற்சிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இக்காலத்தில் தனித்துவமான யோசனைகள் தோன்றுவதால், வேலை அல்லது தொழிலில் எதிர்பாராத நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். வசதிகள் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்வோருக்கு நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

Kendra Trikon Rajyog On 15 May 2026 These Zodiac Signs Will Be Lucky

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் புதாதித்ய ராஜயோகத்துடன், கேந்திர திரிகோண ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். மேலும் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பணியிடத்தில் இதுவரை சந்தித்து வந்த தடைகள் நீங்கும். ஐடி, மருத்துவம், விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். செல்வம் குவியும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net