← முகப்பு செய்திகள்

Prince Yadav made a grand entry with a spectacular diving catch to

🕐 18 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
Prince Yadav made a grand entry with a spectacular diving catch to

லக்னோ: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் அறிமுக வீரராக களம் இறங்கிய பிரின்ஸ் யாதவ், இப்ராஹிம் சத்ரானை ஆட்டமிழக்கச் செய்ய ஒரு சிறப்பான டைவிங் கேட்சை பிடித்தார். பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்ட பிரின்ஸ், பந்துவீச்சில் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற முயற்சிக்கும் நிலையில், பிரின்ஸ் தனது அறிமுக சர்வதேச விக்கெட்டைப் பெற மிக அருகில் வந்தார், ஆனால் டிவி நடுவர் அதை நோ-பால் என்று அறிவித்தார். இருப்பினும், டெல்லியைச் சேர்ந்த இந்த இளம் வீரர் மைதானத்தில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.அதன் பின்னர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Prince Yadav makes a spectacular diving catch against Afghanistan

இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய பவுன்சர் பந்தை சத்ரான் புல் ஷாட் ஆட முயன்றார். ஆனால், அந்த வலதுகை பேட்ஸ்மேனால் அந்த பந்தை சரியாக அடிக்க முடியவில்லை. பந்து அவரது பேட்டின் மேல் பகுதியில் பட்டு லெக் சைடில் காற்றில் உயர்ந்தது. டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் இருந்து தனது இடதுபுறமாக வேகமாக ஓடிவந்த பிரின்ஸ், தரையில் சறுக்கிக்கொண்டே பாய்ந்து ஒரு அற்புதமான கேட்சை பிடித்தார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 அதிவேக சதம் விளாசிய இந்திய அணி கேப்டன்கள் பட்டியல்

பந்து காலியான இடத்தில் விழவிருந்த நிலையில், அவரது இந்த முயற்சி விக்கெட்டை வீழ்த்த உதவியது. இந்த அபாரமான கேட்சினால் அறிமுக வீரர் பிரின்ஸ் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார், சக வீரர்கள் அனைவரும் அவரை ஓடிவந்து பாராட்டினர். ஒரு காலத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபீல்டிங்கில் மோசமாக செயல்படுவார்கள். குறிப்பாக இந்திய பவுலர்கள் டைவ் அடிக்கும் மயற்சியை மேற்கொள்ள மாட்டார்கள்.

காரணம், பவுலர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் இந்த விஷப்பரீட்சையில் ஈடுபடுவதில்லை. ஆனால், இப்போதுள்ள பவுலர்கள் உடல் தகுதியில் தீவிர கவனம் செலுத்துவது மட்டும் அல்லாமல், பந்துகளை கேட்ச் பிடிக்க டைவ் அடிப்பதில் தயங்குவதில்லை. உடல் தகுதி கிரணமாக பந்துகளையும் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசுகிறார்கள்.

முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் ஆகியோரின் அபாரமான சதங்களின் உதவியுடன் இந்திய அணி 402 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் தந்ததைத் தொடர்ந்து, கில் மற்றும் கிஷான் ஆகியோர் அணியின் ரன் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இதில் கில் அதிரடியாக விளையாடி 154 ரன்களும், கிஷான் வெறும் 79 பந்துகளில் 125 ரன்களும் குவித்தனர்.

IND vs AFG: இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்தேன்.. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்

ஆப்கானிஸ்தான் தரப்பில் நங்கேயாலியா கரோட்டி சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் தனது பங்களிப்பை அளித்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net